திங்கள், 5 ஜூலை, 2021

தமிழ் பாடல்வரிகள் - தட்டான் தட்டான் வண்டிகட்டி

 

படத்தின் பெயர்  :  கர்ணன் (2021)

இசை           : சந்தோஷ் நாராயணன்

பாடியவர்கள்    : தனுஷ், மீனாட்சி இளையராஜா

பாடல் வரிகள்  : யுகபாரதி

 


ஆண்: தட்டான் தட்டான் வண்டிகட்டி
பறந்தேன் கோழி தூவாட்டம்
சொக்க பனை மேல நின்னு
அடிச்சா சூர காத்தாட்டம்

ஆண்: மொட்டை பாறை பூவா வெடிச்சேனே
உச்சி தேனை வாரி குடிச்சேனே
என் கைரேகை பாத்த பேச்சி
கத சொன்னாலே நீயே சாட்சி

ஆண்: நா போற வர பாதையில
நெருஞ்சி முள்ள ஒதுக்கும் உன் பார்வை

ஆண்: தட்டான் தட்டான் வண்டிகட்டி
பறந்தேன் கோழி தூவாட்டம்
சொக்க பனை மேல நின்னு
அடிச்சா சூர காத்தாட்டம்

ஆண்: குதிலுள நெல்லாட்டம்
குமியுதே உன் வாசம்
ஆசையா நீ பாக்க
சோறு பொங்கும்

ஆண்: தெருவுல போனாலும்
புழுதியா வந்தாலும்
தாவணி ராசாவா
மாத்த சொல்லும்

ஆண்: சேந்தனலா நெஞ்சிருக்க
உன் நெனப்பே தூரல் அடிக்கும்
ஊர் நிழலா நா இருக்க
என் நெசமே நீதாண்டி

ஆண்: முத்தத்தை தாயேன் ராசாத்தி
மொத்தமும் தரேன் கைமாத்தி

ஆண்: தட்டான் தட்டான் வண்டிகட்டி
பறந்தேன் கோழி தூவாட்டம்
சொக்க பனை மேல நின்னு
அடிச்சா சூர காத்தாட்டம்

பெண்: உழவன் வயலுல எறங்கி
கூரா நாத்தையும் பிரிச்சு
பொண்ணா நெலத்தையே காக்கும்
பெருங்குடியாம் உழகுடியாம்

பெண்: பூட்டன் புஞ்சைய தொலைச்சான்
பாட்டன் நஞ்சைய தொலைச்சான்
கல்லா கடவுளும் கெடக்க
காடானோம் கூலிகுடியானோம்

பெண்: ஜெய்ச்சிட்டு கண்ணு
ஜெயிச்சிட்டு கண்ணு

ஆண்: காக்கா குருவி
நெதம் கூட்டம் போட்டு
நம்ம கதையை பேச
மேகம் கேட்டு ஏங்குதே
மழை ஓங்குதே

ஆண்: ஒடம்பெடுத்து தீக்கொழுத்து
உயிர் எரிய நனைஞ்ச கெடப்போம்

ஆண்: தட்டான் தட்டான்
தட்டான் தட்டான்

ஆண்: தட்டான் தட்டான் வண்டிகட்டி
பறந்தேன் கோழி தூவாட்டம்
அட சொக்க பனை மேல நின்னு
அடிச்சா சூர காத்தாட்டம்

ஆண்: சூர காத்தாட்டம்
சூர காத்தாட்டம்
தட்டான் தட்டான்
தட்டான் தட்டான்
தட்டான் தட்டான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  படத்தின் பெயர் :  ஜெகமே தந்திரம்  இசை                          :  சந்தோஷ் நாராயணன்  பாடியவர்கள்     :   தனுஷ், தீ... மற்றும்  சந்தோஷ் நாரா...